தொழிலாளி மீது தாக்குதல்

பரப்பாடியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொழிலாளி மீது தாக்குதல்
Published on

இட்டமொழி:

பரப்பாடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருமைதுரை மகன் பிரேம்குமார் (வயது 42) தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு எதிர்வீட்டில் வசித்து வரும் ரஜினி தேவதாஸ் (45) என்பவரிடம் அவரது மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினி தேவதாசும், அவரது உறவினர் சுரேஷ் (47) என்பவரும் சேர்ந்து கம்பால் பிரேம்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com