தொழிலாளி மீது தாக்குதல்; அண்ணன் கைது

களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி மீது தாக்குதல்; அண்ணன் கைது
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணன் சுடலைக்கண்ணு (48) என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 17.11.2020 அன்று ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் சுடலைக்கண்னு மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று ராமகிருஷ்ணன் சுப்பிரமணியபுரத்தில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைக்கண்ணு, அதே ஊரைச் சேர்ந்த தளவாய் மகன் வெள்ளப்பாண்டி ஆகியோர் ராமகிருஷ்ணனை கீழே தள்ளி, அவரது கைகளை கயிற்றால் கட்டி தாக்கியதாகவும், அவரது காலில் கல்லை தூக்கி போட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலைக்கண்ணுவை கைது செய்தார். வெள்ளப்பாண்டியை தேடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com