தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது

நெல்லை அருகே தொழிலாளி தாக்கப்பட்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது
Published on

பேட்டை:

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மகாத்மாகாந்தி நகரை சேர்ந்தவர் குருசாமி மகன் மாதவன் (வயது 36). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சசிகுமார் (28). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சசிகுமார் அருகில் கிடந்த கம்பால் மாதவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாதவன், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com