சட்டசபை தேர்தல்: ஒரே தொகுதியில் வீரப்பனின் மனைவி-மகள் போட்டியா..?

மேட்டூர் தொகுதி நா.த.க. வேட்பாளராக போட்டியிட உள்ளதாக வீரப்பனின் மகள் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல்: ஒரே தொகுதியில் வீரப்பனின் மனைவி-மகள் போட்டியா..?
Published on

மேட்டூர்,

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேட்டூர் சட்டசபை தொகுதி நாம்தமிழர்கட்சி வேட்பாளர் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா நேற்று மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து. சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, எனது அரசியல் ஈடுபாட்டின் காரணமாக, மேட்டூர் தொகுதி நா.த.க. வேட்பாளராக போட்டியிடுகிறேன். மேலும் இந்த பகுதி மக்களை சந்தித்து எங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறேன் என்றார்.

இதனைத்தொடர்ந்து உங்களுடைய தாயும் (வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி), நீங்களும் ஒரே தொகுதியில் போட்டியிட உள்ளீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், நானும், என் தாயாரும் தமிழ்தேசியம் என்ற ஒரே கொள்கையை பின்பற்றி வருகிறோம். அவர் மேட்டூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடவில்லை. மற்றொரு தொகுதியில் போட்டியிடுவது குறித்து அவர் சார்ந்துள்ள கட்சி தான் முடிவு செய்யும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com