சட்டமன்ற தேர்தல்: வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? - முழு தகவல்

ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  • வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் Form 10-ஐ ஒரு வேட்பாளருக்கு 2 ஏஜெண்டுகள் தனித்தனியே பெற்று PO-விடம் கொடுக்க வேண்டும்.

  • PO முகவர்களுக்கு தனித்தனியே அடையாள அட்டை வழங்குவார்.

  • Ballot Unit-ல் உள்ள வேட்பாளர் வரிசையின்படி முகவர்கள் அமர வேண்டும்.

  • முகவர்கள் கட்டாயம் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். (முகவர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்)

  • கரை வேட்டி கட்டலாம், ஆனால் சின்னம் இருக்கக்கூடாது.

  • ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் இருக்க வேண்டும்.

  • காலை 5.15-க்கு வாக்கு சாவடிக்கு வர வேண்டும்.

  • முகவரிடம் உள்ள வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்ல கூடாது.

  • தேர்தல் முடியும் கடைசி 2 மணி நேரத்திற்கு முகவர் வாக்குச்சாவடிக்கு வெளியே செல்ல அல்லது வாக்குச்சாவடிக்குள் வரவோ கூடாது.

  • வாக்குச்சாவடிக்குள் அரசியல் பேச கூடாது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com