சட்டமன்ற தேர்தல்: தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிபொருள் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் 24ம் தேதி வரை, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4ம் தேதி வரை என மொத்தம் 7 நாட்கள் வெடிபொருள் கடைகளை கட்டாயம் மூட வேண்டும்.
சட்டமன்ற தேர்தல்: தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிபொருள் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் விஜூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்றும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணும் வகையில் 1884-ம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைத்துக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி வைக்கத் தமிழக அரசு (அரசாணை எண்: G.O (D) No. 454, உள்துறை, நாள்: 18.03.2026) ஆணையிட்டுள்ளது.

மேற்சொன்ன அரசாணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகள் வாக்குப்பதிவை முன்னிட்டு 21.4.2026 முதல் 24.4.2026 வரை, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு: 2.5.2026 முதல் 4.5.2026 வரை ஆகிய 7 நாட்களும் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தத் தடையை மீறிச் செயல்படும் வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com