சட்டசபை தேர்தல்: 21-ந்தேதி முதல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்தகட்டமாக, வருகிற 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

Also Read
தவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
கோப்புப்படம்

இது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் என்ற பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Also Read
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
கோப்புப்படம்

அதன் தொடர்ச்சியாக, 21-2-2026 முதல் 26-2-2026 வரை பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளுக்கு அம்பத்தூரில் பிரசாரம் நடைபெறுகிறது. 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மாதவரத்திலும், மாலை 5 மணிக்கு பொன்னேரியிலும் பிரசாரம் நடக்கிறது.

25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளுக்கு மாலை 5 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் பிரசாரம் நடக்கிறது. 26-ந்தேதி (வியாழக்கிழமை) தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளுக்கு மாலை 4.30 மணிக்கு பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பிரசாரம் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com