சட்டமன்ற தேர்தல்: நெல்லையில் போலீசார் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நெல்லை மாநகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
சட்டமன்ற தேர்தல்: நெல்லையில் போலீசார் கொடி அணிவகுப்பு
Published on

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, திருநெல்வேலி மாநகர பகுதிகளில், மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர பகுதிகளான சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குப்பட்ட குறுக்குத்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம் வழியாக சென்று ம.தி.தா. பள்ளி வரையும், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊருடையார்புரம் வழியாக சென்று தச்சநல்லூர் ரவுண்டான வரை ஆகிய பகுதிகளில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த கொடி அணி வகுப்பில், சரக போலீஸ் உதவி கமிஷனர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சட்டம் & ஒழுங்கு காவல் துறையினர், ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் என 160க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com