சட்டசபை தேர்தல்: அதிமுக விருப்ப மனு பெற இன்று கடைசி நாள்


சட்டசபை தேர்தல்: அதிமுக விருப்ப மனு பெற இன்று கடைசி நாள்
x

கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை அதிமுகவினர் தாக்கல் செய்து வருகின்றனர்

சென்னை,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை அதிமுகவினர் தாக்கல் செய்து வருகின்றனர்.

மனு தாக்கல் செய்ய வரும்போது, பலரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல வேடமிட்டு வருகின்றனர். இதனால் இவர்களை பார்க்க அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதிமுக விருப்ப மனு ரூ.15,000-க்கும், புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.5000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுகவினர் அளித்து வரும் விருப்ப மனுக்களை அமைப்பு செயலாளர்கள் முன்னின்று பெற்று வருகின்றனர். கடந்த 15ம் தேதி தொடங்கிய விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது.

எனவே போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ரூ.15,000க்கு வரைவோலை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. விருப்ப மனுக்களை வழங்க இன்றே கடைசி நாள் என்பதால் , ஏராளானோர் இன்று மனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story