சட்டமன்ற தேர்தல்: தவெக தலைவர் விஜய் வாக்களித்தார்

தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
சட்டமன்ற தேர்தல்: தவெக தலைவர் விஜய் வாக்களித்தார்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தார். வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை விஜய் காண்பித்தார். வாக்களித்துவிட்டு வெளியே வந்த விஜய் அங்கிருந்த முதியவர்களிடம் கலந்துரையாடினார்.

விஜய்யை காண வாக்குச்சாவடிக்கு முன் தொண்டர்கள் குவிந்துள்ளனர். முன்னாதாக கீழே விழுந்த செல்போனை எடுத்து உரியவரிடம் விஜய் கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com