நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் இணைந்து நடைபெறும்-அ.தி.மு.க. அவைத்தலைவர் நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் இணைந்து நடைபெறும் என்று அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் இணைந்து நடைபெறும்-அ.தி.மு.க. அவைத்தலைவர் நம்பிக்கை
Published on

அரியலூர் மாவட்டம் கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ள தர்காவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார். அதன்பின்னர் தர்காவில் உள்ள நினைவிடம் மீது மலர் போர்வை போர்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது பொய் வழக்கு தொடரப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்ய வேண்டி 175 தர்காக்களில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து வழிபாடு மேற்கொண்டேன். அதன் பிறகு ஜெயலலிதா விடுதலை அடைந்து மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

அதைப்போலவே தற்போது தமிழ்நாடு முழுவதும் 75 தர்காக்களில் முன்னாள் முதல்-அமைச்சரும் -சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று வழிபாடு மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 47 தர்காக்களில் வழிபாடுகள் செய்து முடித்துள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் இணைந்து நடைபெறும் என்று நம்புகிறோம். அப்போது நிச்சயம் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com