ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்

கோப்புப்படம்
ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் அப்பாவு, "ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு இப்பேரவை அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறது.
நம் நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களை இழந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ஆற்றிய சேவையை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிகழ்வில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் விரைவில் குணமடையவும் இப்பேரவை விழைகிறது" என்று கூறினார்.






