சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
Published on

சென்னை,

அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை தீவிர சோதனை நடத்தினர். அவரது மகன் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.127 கோடி ஊழல் செய்துள்ளதாக காமராஜ் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 6 பேர் மீது 810 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையுடன், 18000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com