உதவி கலெக்டர் திடீர் ஆய்வு

ஜோலார்பேட்டையில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
உதவி கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இணையதளத்தில் இ-பட்டாவாக மாற்றம் செய்வது தொடர்பாக பயனாளிகளின் விவரத்தினை உதவி கலெக்டர் பானுமதி இன்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடியானகுப்பம் அண்ணாமலை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு இ-பட்டாவாக மாற்றம் செய்வது குறித்த விவரத்தினை அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் அலுவலர் அன்னலட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com