தொழிலாளர் உதவி ஆணையர் திடீர் ஆய்வு

அய்யலூர் வாரச்சந்தையில் தொழிலாளர் உதவி ஆணையர் திடீர் ஆய்வு செய்தார்.
தொழிலாளர் உதவி ஆணையர் திடீர் ஆய்வு
Published on

அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை காய்கறி வாரச்சந்தை நடைபெறும். இங்கு அய்யலூரைச் சுற்றியுள்ள மலை கிராமங்களான கோம்பை, குப்பாம்பட்டி, பூசாரிபட்டி, புத்தூர், தபால்புள்ளி, குருந்தம்பட்டி, உள்ளிட்ட மலை கிராம மக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் சந்தையில் வியாபாரிகள் முத்திரையிடப்படாத எடை கற்களை பயன்படுத்துவதாக திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசிந்து தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று அய்யலூர் சந்தையில் திடீர் ஆய்வு செய்தனர். அதில் முத்திரையிடப்படாத 2 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து வியாபாரிகள் மின்னணு மற்றும் மேடை தராசுகளை வருடத்திற்கு ஒரு முறையும், மற்ற தராசுகளை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முத்திரை வைத்து, அதற்கான சான்றிதழ்களை இணைத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் முத்திரையிட தவறும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com