தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்

தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்
Published on

தியாகதுருகம், 

தியாகதுருகம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் செலின் மேரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் ராஜா வரவேற்றார். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 13 பேருக்கு ரூ.64 ஆயிரம் மதிப்பில் சக்கர நாற்காலி, செயற்கை கால்கள், தள்ளுவண்டி ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவக்குமார், விஜயலட்சுமி, காயத்ரி, முகமது இதயத்துல்லா, கோகிலா மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com