பரமத்திவேலூரில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம்

பரமத்திவேலூரில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம்
Published on

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூரில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வையாபுரி தலைமை தாங்கினார். செயலாளர் நடேசன் வரவேற்றார். பொருளாளர் ராசப்பன் வரவு, செலவு கணக்கினை சமர்ப்பித்தார். கூட்டத்தில் சங்க நிறுவனரும், கவுரவத் தலைவருமான நடராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ராஜா, பொய்யேரி மற்றும் கொமராபாளையம் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். ஏற்கனவே தூர்வாரப்பட்ட வாய்க்கால்களில் தூர்வாரப்பட்ட மண்ணை வாய்க்கால் மேட்டில் ஆங்காங்கே கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. வாய்க்கால் மேட்டில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மண்ணை வாய்க்கால் கரையிலேயே வாகனங்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு இடு பொருட்கள் எடுத்துச் செல்லும் வகையில் சமன் செய்து சீர் செய்ய வேண்டும். வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே பொத்தனூரில் நன்கு செயல்பட்டு வந்தது. அதை மீண்டும் பரமத்திவேலூர் பகுதிக்கு கொண்டு வர தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com