கூடலூர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு

கூடலூரில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது
கூடலூர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு
Published on

கூடலூரில் வடக்கு, தெற்கு மற்றும் லோயர்கேம்ப் ஆகிய 3 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், அல்போன்ஸ்ராஜா, ஆகியோர் முன்னிலையில் புகார் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. அதில் நிலுவையில் இருந்த 13 புகார்களுக்கு தீர்வு கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com