ஈரோட்டில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா
ஈரோட்டில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு சூரம்பட்டி போலீசார் கிராமடை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், சூரம்பட்டி கிராமடை 3-வது வீதியை சேர்ந்த சிவமுருகனின் மகன் சுதர்சன் என்கிற ரிஷா (வயது 22), சூரம்பட்டி எஸ்.கே.சி.ரோட்டை சேர்ந்த சண்முகத்தின் மகன் நித்தியானந்தம் (28), தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டியை சேர்ந்த அன்புவின் மகன் வடமலை என்கிற விஜய் (23) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com