காமநாயக்கன்பட்டியில், வருகிற 6-ந் தேதிபுனித பரலோக மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்:பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

காமநாயக்கன்பட்டியில், வருகிற 6-ந் தேதிபுனித பரலோக மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காமநாயக்கன்பட்டியில், வருகிற 6-ந் தேதிபுனித பரலோக மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்:பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
Published on

நாலாட்டின்புத்தூர்:

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய திருவிழா வருகிற 6-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேர்பவனி வருகிற 14 -ந் தேதி அதிகாலை 2 மணியளவில் நடக்கிறது. 15-ந்தேதி காலை 8 மணியளவில் திருவிழா தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழா பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காமநாயக்கன்பட்டியிலுள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கயத்தாறு தாசில்தார் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆலய பங்குதந்தை அந்தோணி குரூஸ் வரவேற்றார். கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசுகையில், ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெறும் 6-ந் தேதி சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். பொதுமக்களின் வசதிக்காக சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 24 மணி நேரமும் மருத்துவ வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நோய் தொற்றுகள் பரவாதவாறு கொசு மருந்துகள் அடிக்கவும் பஞ்சாயத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இதில் பஞ்சாயத்து தலைவர் கலைச்செல்வி, கோவில்பட்டி மின் வாரிய இளநிலை பொறியாளர் (ஊரகம்) முருகேசன், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும் போக்குவரத்து துறை, சுகாதார துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைஅதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com