மணியாச்சி ரெயில் நிலையத்தில்ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

மணியாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
மணியாச்சி ரெயில் நிலையத்தில்ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
Published on

தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 70). இவர் தூத்துக்குடியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காலையில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் நின்றாராம். மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்து உள்ளது. அப்போது ஆறுமுகசாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆறுமுகசாமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com