நாடார் உறவின்முறை வித்யாலயா பள்ளியில்விநாயகர் சதுர்த்தி விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
நாடார் உறவின்முறை வித்யாலயா பள்ளியில்விநாயகர் சதுர்த்தி விழா
Published on

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் விநாயகர் சிலையை மாணவர்கள் சுமந்து பள்ளி வளாகத்தில் வலம் வந்தனர். மாணவிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.

108 மாணவர்கள் விநாயகர் வேடமிட்டு பங்கேற்றனர். அவர்கள், பள்ளி மைதானத்தில் விநாயகர், ஓம் போன்ற வடிவங்களில் அமர்ந்து அசத்தினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com