சாலைபுதூர் சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

சாலைபுதூர் சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
சாலைபுதூர் சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளர்களுக்கு அயோடின் உப்பு பயன்பாடு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் தயாளன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி சுகாதார பணிகள் அலுவலகத்தை சேர்ந்த மாநில அளவிலான குழு பயிற்சியாளர்கள் சரவணன், மாரியப்பன், செய்யது அகம்து ஆகியோர் அயோடின்உப்பு பயன்கள் குறித்தும், குறைபாடால் ஏற்படும் நோய்கள் குறித்தும் எடுத்துரைத்து செயல்முறை பயிற்சி அளித்தனர். உப்பு குறித்த சோதனை நடத்தவும் அறிவுறுத்தினர். இதில் சுகாதார செவிலியர்கள் மெர்சி, மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார் உள்ளிட்ட ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com