ஈரோடு அருகே சோலாரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சோலாரில் தற்காலிக பஸ் நிலையம்
ஈரோடு அருகே சோலாரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
Published on

ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு புதிதாக ரேக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், தங்கும் விடுதிகள், கடைகள் உள்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்ல மிகவும் சிரமமாக உள்ளதால், தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வரும் பஸ்கள், ஈரோடு சோலார் பகுதியில் நின்று, செல்வதற்கு வசதியாக அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தெடர்ந்து அங்கு நவீன பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

----------

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com