தலமலை வனச்சாலையில் யானைகள் நடமாட்டம்

தலமலை வனச்சாலையில் யானைகள் நடமாடுகிறது.
தலமலை வனச்சாலையில் யானைகள் நடமாட்டம்
Published on

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடியில் இருந்து திம்பம் செல்லும் வனச்சாலையை யானைகள் கூட்டம் கூட்டமாக கடந்து செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் அடிக்கடி தலமலை வனச்சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை மிக மெதுவாக இயக்குவதுடன், யானைகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் செல்ல வேண்டும்,' என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com