வேளாண் அறிவியல் மையத்தில்தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், தொழில்முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
வேளாண் அறிவியல் மையத்தில்தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
Published on

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், தொழில்முனைவோர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி பல்வேறு கட்டமாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, மூலிகை மற்றும் காய்கறி பழக்கழிவுகளில் இருந்து ஒப்பனை மற்றும் சுகாதாரப் பொருட்கள் தயாரித்தல் குறித்த 2 நாட்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடந்தது. பயிற்சிக்கு அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் வரவேற்றார்.

கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் ரேணுகாதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். காய்கறி மற்றும் பழக்கழிவுகளில் இருந்து பயோ என்சைம்ஸ், மூலிகை சோப்பு வகைகள், அகர்பத்தி, மெழுகுவர்த்தி மற்றும் பல்வேறு வீட்டுஉபயோக பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில் முனைவோர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், தொழில் தொடங்குவதற்கான வழிவகைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யாசிவசெல்வி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com