

அடையாறு,
தமிழகத்தில் சாலை பரா மரிப்பு பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்கவேண்டும்.
சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்விதிறன் பெற ஊழியர்களுக்கான தர ஊதியம் உள்ளிட்டவை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தங்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து தங்கள் குடும்பத்துடன் வந்த சாலை பணியாளர்கள், உள்ளிருப்பு போராட்டம் செய்வதற்காக நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள் 500 பேர், பெண்கள், குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தினர் 150 பேர் என சுமார் 650 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபம் மற்றும் பள்ளியில் அடைத்து வைத்தனர். இது தொடர்பாக சாலை பணியாளர்கள் கூறியதாவது:-