பதவி ஏற்பு விழாவில் தயாநிதி அழகிரியை கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார்.
பதவி ஏற்பு விழாவில் தயாநிதி அழகிரியை கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேதலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதையடுத்து133 சட்டப்பேரவை உறுப்பினாகளின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல் அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். அழகிரியின் மகள் கயல்விழியும் கலந்து கொண்டார். தயாநிதி அழகிரியை கட்டியணைத்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

நேற்று மு.க.அழகிரி, முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினைப் பாத்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவா மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவா என்று கூறியிருந்தார்.

மேலும் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால், நவநீத கிருஷ்ணன், பாஜக சார்பில் இல.கணேசன் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன், வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,செயலாளர் முத்தரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அபுபக்கர்,

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, ஆற்காடு வீராசாமி, ஐபேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர், கவிஞர் வைரமுத்து, மற்றும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோபண்ணா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com