கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

சென்னை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்

அமெரிக்காவில் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கெடிய நேயான கெரேனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை

மருந்து கண்டுபிடிப்பது ஆராய்ச்சி நிலை குறித்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகவும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை தொடங்கும். கொரோனா அறிகுறிகள்,பாதிப்புகள் இருப்பவர்கள் மட்டுமே அதற்கான சோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமில்லை.

தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறித்து மத்திய அரசுதான் அனுமதி வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்டால் பரிசோதனை செய்ய அரசே கட்டணைத்தை நிர்ணயம் செய்யும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com