தூத்துக்குடியில், வருகிற 22-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில், வருகிற 22-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம் என மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Published on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் அன்றைய தினம் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com