ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அகிலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
Published on

ஆத்தூர்,

கெங்கவல்லி மண்மலை பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அகிலன் (வயது 21). இவர் மருத்துவம் சார்ந்த படிப்பு முடித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அகிலன் செந்தாரப்பட்டியை சேர்ந்த 20 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு திருமணம் செய்ய அகிலன் மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அகிலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com