ஆதிக் அகமது கொலை வழக்கு: ஏன் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லவில்லை - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

இருவரையும் ஏன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆதிக் அகமது கொலை வழக்கு: ஏன் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லவில்லை - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் அகமது, அஷ்ரப் அகமது விவகாரத்தை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்ய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப் அகமது ஆகிய இருவரும் 30 ஆண்டுகளாக கடுமையான குற்றங்களைப் புரிந்து வந்ததாகவும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பழிதீர்க்கும் நோக்கில் இருவரையும் சுட்டுக்கொன்றார்களா? என்ற நோக்கில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ஏன் இருவரையும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை, ஏன் நடந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள்? என கேள்வி எழுப்பினர். குறைந்த தூரம் என்பதால் அவர்களை நடக்க வைத்து அழைத்துச் சென்றதாக உத்தர பிரதேச அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், விசாரணைகளின் விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com