ஏ.டி.எம். கொள்ளையில் பிடிபட்ட நபரிடம் 2-வது நாளாக விசாரணை

ஏ.டி.எம். கொள்ளையில் பிடிபட்ட நபரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
ஏ.டி.எம். கொள்ளையில் பிடிபட்ட நபரிடம் 2-வது நாளாக விசாரணை
Published on

ஏ.டி.எம். கொள்ளையில் பிடிபட்ட நபரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் மர்மநபர்கள் 4 ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையர்களை கைது செய்ய வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை 4 பேர் கைது செய்துள்ளனர்.

மேலும் இதில் தொடர்புடைய பலரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோலார் பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை 2 நாட்களாக நீடிக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொள்ளையடிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.69 லட்சம் வரை மீட்கப்பட வேண்டி உள்ளது.

பிடிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் வேறு ஒரு நபரிடம் பணம் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர். எனவே நிஜாமுதீனிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் யாரிடம் உள்ளது?, எதற்காக செலவிடப்பட்டது? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னரே அனைத்து தகவல்களையும் முழுமையாக கூற முடியும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com