ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடிய மர்மநபர்

சாத்தூரில் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடிய மர்மநபைர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடிய மர்மநபர்
Published on

சாத்தூர்,

சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 49). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தரும் படி ஒருவரிடம் கார்டை கொடுத்து ரகசிய எண்ணையும் கூறியதாக தெரிகிறது. அந்த நபர் பாலசுப்பிரமணியனின் கார்டை மறைத்து வைத்துவிட்டு, வேறொரு கார்டை எந்திரத்தில் வைத்து பார்த்து விட்டு உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று கூறி கார்டை திரும்ப கொடுத்துள்ளார். பின்னர் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து அந்த நபர் பாலசுப்பிரமணியனின் கார்டை பயன்படுத்தி ரூ. 1,20,000 வரை வெவ்வேறு வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து வெவ்வேறு தினங்களில் பணம் எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது வங்கி கணக்கை பாலசுப்பிரமணியன் சரிபார்த்த போது பணம் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com