திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை நியாயப்படுத்த முடியாத தவறு : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக முதல் அமைச்சர் பேசினார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை நியாயப்படுத்த முடியாத தவறு : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
Published on

சென்னை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்தையும் உண்டாக்கியிருக்கிறது. .இந்தநிலையில், விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்தாரிடம் இன்று முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமார் வீட்டில் உடனிருந்தார்.இந்த தொலைபேசி உரையாடலின்போது, அஜித்குமாரின் குடும்பத்திடம் ஆழ்ந்த இரங்கலை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார். முதல் அமைச்சர் தொலைபேசி வாயிலாக உரையாடிய பதிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை நியாயப்படுத்த முடியாத தவறு. இளைஞருக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்க கூடாது . கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு உரிய தண்டனை பெற்று தரும். " என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com