3 பேர் மீது தாக்குதல்

கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
3 பேர் மீது தாக்குதல்
Published on

மானூர்:

மானூர் அருகே உள்ள உத்திரன்கோட்டையை சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் பாலசுப்ரமணியன் (வயது 21). கல்லூரி மாணவர். இவர் வசிக்கும் பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு தேவைக்காக குடிநீர் கேன்கள் வாங்குவதற்காக, தனது நண்பர்களான மனோஜ் குமார், முத்துவேல் ஆகியோருடன் அதே ஊரிலுள்ள மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெருவிற்கு சென்றுள்ளார். கேன்களை வாங்கி விட்டு திரும்பிய போது, அதே தெருவில் நின்றிருந்த 3 பேர் இவர்களை வழிமறித்து அவதூறாக பேசியதுடன், அடித்து கீழே தள்ளி தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, கொலை மிரட்டல் விடுத்தபடி மூவரும் ஓடி விட்டனர்.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் மானூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தி இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் கனகராஜ் ( 31), சாமுவேல் மகன் ஜான்சன், (24) மற்றும் சுந்தர்ராஜ் மகன் செல்வா என்ற செல்வகுமார் (25) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com