மதுரையில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் - 2 பேர் மீது வழக்கு

மதுரையில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரையில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் - 2 பேர் மீது வழக்கு
Published on

மதுரையில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

கண்டக்டர் மீது தாக்குதல்

மதுரை திருப்பரங்குன்றம் தேவிநகரை சேர்ந்தவர் சிவசக்திகுமார் (வயது 38). இவர் அரசு டவுன்பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை செய்த பஸ் வில்லாபுரம் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தது. பஸ் அங்குள்ள நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட போது வாலிபர் ஒருவர் வேகமாக ஓடி வந்து அந்த பஸ்சில் ஏறினார். மேலும் தன் நண்பர் வருவதாக கூறி பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அதை கண்டக்டர் தட்டி கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவருடைய நண்பரும் வந்து பஸ்சில் ஏறி விட்டார். பின்னர் அவரும் சேர்ந்து கண்டக்டரிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.

2 பேர் மீது வழக்கு

அதில் கண்டக்டர் கையில் வைத்திருந்த 400 ரூபாயை காணவில்லை. இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com