தம்பதி மீது தாக்குதல்

நெல்லை அருகே தம்பதியை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தம்பதி மீது தாக்குதல்
Published on

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் தெற்கூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 59). இவர் கீழநத்தம் பகுதியில் டீக்கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் சித்திரை என்பவர் நடராஜன் மற்றும் அவரின் மனைவி நாச்சியார் ஆகியோரிடம் தகராறு செய்து, தாக்கி கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடராஜன் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், சித்திரை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com