விவசாயி மீது தாக்குதல்

தட்டார்மடம் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
விவசாயி மீது தாக்குதல்
Published on

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள செட்டியார்பண்ணையை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 60). இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அப்பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், ராஜலிங்கம் விவசாயம் செய்து வரும் தோட்டத்தில் இரும்பு கம்பிகளை ஒப்பந்ததாரர் வைத்துள்ளார். இந்த கம்பிகள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.

இதில் இடைச்சிவிளையை சேர்ந்த ஜோரன்ஸ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக ராஜலிங்கம் கூறினாராம். இதனை அறிந்த ஜோரன்ஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஸ்டார்வின், ரஞ்சித், ஜெபசுந்தர், டைட்டஸ் (வயது 32) ஆகியோர் ராஜலிங்கத்தை அவதூறாக பேசி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராஜலிங்கம் மகன் சிவகிருஷ்ணன் (22) கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com