விவசாயி மீது தாக்குதல்

விவசாயி மீது தாக்குதல்
விவசாயி மீது தாக்குதல்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ராஜாசிங் (வயது 46). விவசாயி. சம்பவத்தன்று இவர் களக்காடு வந்து விட்டு, மேலப்பத்தைக்கு திரும்பி கொண்டிருந்தார். தாமரைகுளத்தின் கரையில் சென்ற போது அவரது உறவினர் யோசுவா என்பவரும், ரூபன் என்பவரும் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தனர், இதைப்பார்த்த ராஜாசிங் யோசுவாவிடம் இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேட்டார். இதில் ரூபனுக்கும், ராஜாசிங்கிற்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரூபன், ராஜாசிங்கை அவதூறாக பேசி, தலையில் கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த ராஜாசிங் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரூபனை தேடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com