விவசாயி மீது தாக்குதல்

திண்டுக்கல் அருகே விவசாயியை தாக்கிய தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயி மீது தாக்குதல்
Published on

திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டை பாறைப்பட்டியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 65). விவசாயி. இவருக்கும், அவருடைய தம்பி கருத்தக்கண்ணு என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பொன்ராஜ் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது குடும்பத்தினருடன் வந்த கருத்தகண்ணு, பொன்ராஜிடம் தகராறு செய்தார்.

தகராறு முற்றிய நிலையில் கருத்தக்கண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து பொன்ராஜை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பொன்ராஜ், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கருத்தகண்ணு, அவரது மனைவி கருப்பாயி, மகன் பழனிவேல், மகள் ஜோதி ஆகிய 4 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com