கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவன் மீது தாக்குதல்: மனைவி, மாமியார் கைது

பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவன் மீது தாக்குதல்: மனைவி, மாமியார் கைது
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38) தொழிலாளி. இவருக்கும் அத்தியூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுகந்தி (வயது 30) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வெளி நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபு இதுபற்றி தனது மனைவியிடம் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுகந்தி, மாமனார் செல்வம் (55), மாமியார் சுமதி(48), மைத்துனர் அறிவழகன் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து பிரபுவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரபுவின் தம்பி விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சுகந்தி உள்பட 4 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகந்தி, சுமதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வம், அறிவழகன் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com