புலம் பெயர்ந்த தொழிலாளர் மீது தாக்குதல்: போலி வீடியோக்களை பகிர்ந்த யூடியூபர் மீது வழக்கு

புலம் பெயர்ந்த தொழிலாளர் மீது தாக்கியதாக போலி வீடியோக்களை பகிர்ந்த யூடியூபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புலம் பெயர்ந்த தொழிலாளர் மீது தாக்குதல்: போலி வீடியோக்களை பகிர்ந்த யூடியூபர் மீது வழக்கு
Published on

தமிழகத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போலி வீடியோக்கள் தொடர்பான வழக்கில் பீகாரை சேர்ந்த மனிஷ் காஷ்யப் என்பவரை அம்மாநில போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மனிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பீகார் சிறையில் இருக்கக்கூடிய அவரை, மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை பெற்றுள்ளதாகவும், மதுரையில் இருந்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பீகார் சென்று அவரை அழைத்து வந்து ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com