

கோவை,
த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள். அமைச்சர் அண்ணன் சம்பத் குமார் மீது தாக்குதல் நடத்தும் அ.தி.மு.க., தி.மு.க. ஆதரவாளர்களுக்கு எனது எச்சரிக்கை. தேர்தல் களத்தை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளுங்கள்!
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகி அல்லது வேட்பாளர் மக்களை சந்திப்பதைத் தடுப்பது, அவர்களை அச்சுறுத்துவது அல்லது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புக்கு எதிரானது.
தங்களது ஆதரவாளர்களை வைத்து ஒரு மக்கள் பிரதிநிதியை மக்களை சந்திக்க விடாமல் தடுப்பதும், தாக்குதலில் ஈடுபடுவதும் அரசியல் மாண்பு அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. மக்களின் தீர்ப்பே இறுதியானது. மக்களின் குரலாக த.வெ.க. தொடர்ந்து களத்தில் நிற்கும்!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.