கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் மீது தாக்குதல் - 6 மாணவர்கள் கைது


கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் மீது தாக்குதல் - 6 மாணவர்கள் கைது
x

முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.

கோயம்புத்தூர்


கோவை மதுக்கரை அருகே பாலக்காடு சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவரை, பல ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து தாக்கி துன்புறுத்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த தாக்குதல் காட்சிகளை சக மாணவர் யாரோ ஒருவர் தனது செல்போனில் எடுத்துள்ளார். அதில் ஜூனியர் மாணவர்கள் 13 பேர், சீனியர் மாணவரை அடிக்கும் தாக்குதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வகையில் இருந்தது. முன்னதாக, ஜூனியர் மாணவர்களின் பணத்தை சீனியர் மாணவர் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் இன்று கல்லூரி வளாகத்தில் விசாரணைக்காக 13 மாணவர்களும் பெற்றோருடன் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக கல்லூரி விசாரணை குழுவை சேர்ந்த ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர். விடுதி வளாகத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடைபெற்றது

இந்நிலையில் கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஜூனியர் மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story