நாய்குரைத்த பிரச்சினையில் வாலிபர் மீது தாக்குதல்

தட்டார்மடம் அருகே நாய்குரைத்த பிரச்சினையில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நாய்குரைத்த பிரச்சினையில் வாலிபர் மீது தாக்குதல்
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் கிறிஸ்டோபர் (வயது 23). தொழிலாளி. இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன், தங்கத்துரை ஆகியோர் கிறிஸ்டோபர் வீட்டு பகுதியில் சென்றபோது நாய் குரைத்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று முத்துக்குமரன், தங்கத்துரை ஆகியோர் கிறிஸ்டோபர் வீட்டில் புகுந்து? நாங்கள் செல்லும் போது உன்னுடய நாயை குறைக்க விட்டது ஏன்? என்று கூறி அவரை கல் மற்றும் கையால் சரமாரியாக தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த கிறிஸ்டோபர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com