வியாபாரிகள் சங்க நிர்வாகி மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

சாத்தான்குளம் பகுதியில் ஒருவரை சொத்து பிரச்சினையில் அவரது அண்ணன், அண்ணன் மகன் ஆகிய 2 பேரும் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
வியாபாரிகள் சங்க நிர்வாகி மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம், இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் பேய்க்குளம் வியாபாரிகள் சங்க நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருவதோடு, அப்பகுதியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது அண்ணன் கணேசன் மற்றும் அவரது மகன் ராஜ்குமரன் ஆகியோர், மாரிமுத்துவின் வீட்டிற்குச் சென்று சொத்தை எழுதித் தருமாறு மிரட்டியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியதோடு, மாரிமுத்துவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி பூச்செண்டு அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன தந்தை, மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com