கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி தாலுகா அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பத்தூர், 

தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் ஐயாபட்டியை சேர்ந்த பிச்சைமுத்து(வயது 56). இவர் நேற்று தென்கரையில் இருந்து சிராவயல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் வழிமறித்து கட்டையால் தாக்கி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த பிச்சைமுத்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் நாச்சியாபரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் மற்றும் இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் 15-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com