கள்ளக்குறிச்சியில்தாய் வீட்டுக்கு வந்த பெண் மீது தாக்குதல் :தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சியில் தாய் வீட்டுக்கு வந்த பெண் மீது தாக்கிய அவரது தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில்தாய் வீட்டுக்கு வந்த பெண் மீது தாக்குதல் :தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் மனைவி விஜயலட்சுமி (வயது 35). சம்பவத்தன்று எம்.ஆர்.என்.நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது விஜயலட்சுமியை அவரது தம்பி மணிகண்டசிவா (34), அவரது மனைவி கல்பனா ஆகியோர் இந்த வீட்டில் உனக்கு என்ன வேலை என்று அசிங்கமாக திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த டிவி, வாஷிங்மெஷினை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டசிவா, கல்பனா ஆகிய 2 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com