அதிமுக பொதுக்குழுவை கூட்ட எஸ்.பி வேலுமணி -சிவி சண்முகம் தரப்பு முயற்சி?

அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எஸ்.பி வேலுமணி தரப்பினர் கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
அதிமுக பொதுக்குழுவை கூட்ட எஸ்.பி வேலுமணி -சிவி சண்முகம் தரப்பு  முயற்சி?
Published on

அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் -எஸ்.பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்கள், சட்டசபையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல, அதிமுகவில் தாங்கள்தான் பெரும்பான்மை என்றும் தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது.

இரு தரப்பினரின் கடிதங்களும் ஆய்வில் இருப்பதாக பேரவைத் தலைவர் கூறியுள்ளார்.இதனிடையே எஸ்.பி வேலுமணி, பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும், பிரிந்தவர்கள் சேர வேண்டும், கட்சியைப் பலப்படுத்த வேண்டும், இபிஎஸ் அழைத்தால் நாங்கள் பேசத் தயார் என்று கூறியிருந்தார்.அதன்படியே, அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எஸ்.பி வேலுமணி தரப்பு கையெழுத்து பெற்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com